பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் விஜயதசமி விழாவையொட்டி வன்னிகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் குதிரை வாகனத்தில் ராஜாங்க கோலத்தில் பெருமாள் வலம் வந்து வன்னிகாசூரனை வதம் செய்தார். வைகை ஆற்று படித்துறையில் வன்னிகாசூரனை வதம் செய்தார். ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, அசுரனை வதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.