பதிவு செய்த நாள்
29
அக்
2020
11:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு பக்தர்களின் ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வரர் பெருமானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர்க்கு தீபாராதனை, பக்தர்களின் ஸ்ரீ ருத்ரம், திருவாசகம் முழங்க சுவாமி ஆலயம் வலம் வந்தது. இதில் பக்தர்கள் பலரும் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.