மயிலாடுதுறை: சீர்காழி தாலுக்கா திருக்குறையலூரில் எழுந்தருளியுள்ள உக்கிர நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் உத்திரட்டாதி நட்சத்திரமான இன்று நடைபெற்றது. அபிஷேக ஆராதனைகளை பார்த்தசாரதி பட்டாச்சார்யார் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் ஏற்பாடு செய்தார்.