கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் துவங்கியது. திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் கடந்த 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து காலை, மாலை யாகம் நடத்தப்பட்டு, பெருமாள், தாயார், சுதர்சனர், ஆழ்வாராதிகள் பரிவாரங்களுக்கு பவித்ர மாலை சாற்றப்பட்டது. வரும் 30ம் தேதியுடன் பவித்ர உற்சவம் நிறைவடைகிறது.