திருநெல்வேலி : நான்குநேரி அருகேயுள்ள வாகைகுளம் காணியாள சுவாமி கோயில் கொடை விழா இன்று (25ம் தேதி) நடக்கிறது. நான்குநேரி அருகேயுள்ள வாகைகுளத்தில் காணியாள சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொடை விழா இன்று (25ம் தேதி) நடக்கிறது. காலை 9 மணிக்கு பால்குடம் வீதியுலா, மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமபடைப்பு, அதிகாலை 5 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை வாகைகுளம் காணியாள சுவாமி கோயில் கொடை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.