கூந்தகுளம் பூலுடையார் சாஸ்தா கோயிலில் இன்று கொடை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2012 10:05
திருநெல்வேலி : கூந்தகுளம் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோயிலில் இன்று (25ம் தேதி) கொடை விழா நடக்கிறது. கூந்தகுளத்தில் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி மற்றும் பரிவார சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொடை விழா நேற்று துவங்கிறது. நேற்று இரவு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று (25ம் தேதி) காலை சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. ஏற்பாடுகளை கூந்தகுளம் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோயில் கொடை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.