பதிவு செய்த நாள்
25
மே
2012
10:05
திருநெல்வேலி : சாம்பவர்வடகரை ராமசாமி கோயிலில் இன்று (25ம் தேதி) வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சாம்பவர் வடகரை நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ராமபிரான், சீதாபிராட்டி, இளையபெருமாள் சமேதராய் கோதண்டராமனாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருந்திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு இத்திருவிழா இன்று (25ம் தேதி) துவங்குகிறது. காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் கணபதி ஹோமம், 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுதர்ஸன ஹோமம், மகாலட்சுமி பூஜை, 10 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் கொடியேற்றுதல், 10.30 மணிக்கு தேர் கால் நாட்டுதல், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு 1508 திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு விசேஷ பூஜைகள், 8 மணிக்கு பூங்காவன சப்பரத்தில் சுவாமி வீதியுலா, 9.30 மணிக்கு வில்லிசை நடக்கிறது. 2, 3, 4, 6ம் திருவிழா நாட்களில் இரவு 7 மணிக்கு விசேஷ பூஜைகள், 8 மணிக்கு சுவாமி வீதியுலா, 9 மணிக்கு ராமசரிதம் வில்லிசை நடக்கிறது. 29ம் தேதி 5ம் திருவிழா அன்று, இரவு 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை கச்சேரி, நள்ளிரவு 1 மணிக்கு விசேஷ பூஜை, 1.30 மணிக்கு சுவாமி வீதியுலா, 2 மணிக்கு ராமசரிதம் வில்லிசை நடக்கிறது.
7ம் திருவிழாவான 31ம் தேதி அன்று இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சீதாபிராட்டி, ராமச்சந்திரமூர்த்திக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 1ம் தேதி 8ம் திருவிழா அன்று இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், 9 மணிக்கு சுவாமி பாரிவேட்டை புறப்பாடு, 10.30 மணிக்கு இறை நெறியிலம், இல்லறத்திலும் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம், நள்ளிரவு 1.30 மணிக்கு வில்லிசை நடக்கிறது. 2ம் தேதி 9ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, இரவு 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை, நள்ளிரவு 1 மணிக்கு விசேஷ பூஜைகள், 1.30 மணிக்கு சுவாமி வீதியுலா, ராமசரிதம் வில்லிசை நடக்கிறது. 3ம் தேதி 10ம் திருவிழா அன்று மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, 1.40 மணிக்கு சுவாமி தேருக்கு புறப்பாடு, 2.30 மணிக்கு 101வது ஆண்டு தேரோட்டம் வடம் பிடித்தல், இரவு 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை கச்சேரி, நள்ளிரவு 1 மணிக்கு ராமசரிதம் வில்லிசை நடக்கிறது. 4ம் தேதி 11ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், 8 மணிக்கு சுவாமி வீதியுலா, 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை கச்சேரி, நள்ளிரவு 12 மணிக்கு திருவிழா நிறைவு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டியினர் செய்துள்ளனர்.