பதிவு செய்த நாள்
31
அக்
2020
06:10
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் நேற்று அன்ன அலங்காரத்தில் அருள்பாலித்தார். அட்டவீரட்டானத்தில் ஒன்றான திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை 4:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது.தொடர்ந்து 6:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு சாதம், காய்கறிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, சிவபுராணம், சிவ கோஷத்துக்கு இடையே தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்காரம் களையப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரன பூஜை, மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.