சோளிங்கர்: சோளிங்கர், நரசிம்மர் கோவிலில் டோலோற்சவம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஐப்பசி மாதம் டோலோற்சவம் விழா மூன்று நாட்கள் நடக்கும். நேற்று மூன்றாம் நாள் உற்சவம் நடந்தது. இதையொட்டி, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், உற்வச மூர்த்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி திருவீதியுலா நடந்தது.