பதிவு செய்த நாள்
31
அக்
2020
06:10
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டையில் உள்ள விக்னேஷ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சி, செட்டித் தெருவில் உள்ளது விக்னேஷ்வரர் கோவில். சிதலமடைந்து காணப்பட்ட இக்கோவில், பக்தர்கள் பங்களிப்புடன், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்து, நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று, காலை, 6:15 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும், 7:15 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இதைத் தொடர்ந்து, விக்னேஷ்வரர் மற்றும் பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு, மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.