சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2020 12:11
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று (நவ.,1) முதல் துவங்குகிறது. சபரிமலை செல்பவர்கள், நவ.,14 வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். கோவில் நடை வரும் நவ., 15ம் தேதி திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 41 நாடகள் மண்டலபூஜை நிறைவுக்குப் பிறகு டிச.,27 ல் கோவில் நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.