தலைமுறைகள் கண்ட தெப்பம்: குலதெய்வமாக வணங்கும் மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2020 11:11
விருதுநகர்: முன்னோர் வடிவமைத்த கிராமங்களில் தெப்பக்குளம் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். மழை பெய்யும் போது சொட்டு நீரை கூட வீணாக்காமல் தெப்பத்தை வந்தடையும் வகையில் வரத்து கால்வாய்களை அமைத்திருந்தனர்.
தெப்பத்தை சுற்றிலும் கல் கோட்டை அமைத்து மழை நீர் சேமித்து குடிநீர், விவசாயம், பிற தேவைகளுக்கும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வந்தனர்.காலப்போக்கில் தெப்பத்தை பராமரிக்காமல் விட்டதால் கிராமங்களை வறட்சியின் பிடியில் இருந்து காப்பாற்றி வந்த பல தெப்பங்கள் உருக்குலைந்து காணாமல் போய் விட்டது. தெப்பக்குளங்கள் கழிவு நீர் சேமிக்கும் மையமாகவும், குப்பை கொட்டும் தொட்டியாகவும் மாற்றப்பட்டு விட்டன. மழை நீரை சேமிக்க வழியில்லாமல் போனதால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.எனினும் விரல் விட்டு எண்ணும் அளவு சில கிராமங்களில் தெப்பத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். அந்த வரிசையில் விருதுநகர் அருகே மலைப்பட்டி கிராமத்தின் மையத்தில் பல தலைமுறை கண்ட தெப்பக்குளம் கிராம மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேமித்து விவசாயம் பிற தேவைகளுக்காக ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.