க.பரமத்தி: க.பரமத்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர்.பிரசித்தி பெற்ற க.பரமத்தி மாரியம்மன் கோவிலில் கடந்த 20 ம் தேதி மாவிளக்கு பூஜையுடன் விழா தொடங்கியது. 21 ம் தேதி காலை பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. 22 ம் தேதி காலை கிடா வெட்டுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நடந்தது. 23 ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.