விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை(26ம் தேதி) துவங்குகிறது.விழாவையொட்டி நாளை மாலை 6 மணிக்கு பகவத் அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது.தொடர்ந்து தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். அடுத்த மாதம் 2ம் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், 4ம் தேதி திருத்தேர் மகோற்சவமும் நடக்கிறது.அதனை தொடர்ந்து 6ம் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் பத்ராசலம், அர்ச்சகர் வாசு பட்டச்சாரியார் செய்து வருகின்றனர்.