சாணார்பட்டி:கொசவப்பட்டியில் இயேசு வானுலகத்தை அடைந்த நாற்பதாம் நாள் விழா, 18 கிராமத்தினர் பங்களிப்புடன் நடந்தது. இங்குள்ள உத்திரிய மாதா ஆலயத்தில் இயேசு உயிர்ப்பித்த தினத்தை முன்னிட்டு, தம்மனத்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சூசை, இயேசு, அன்னை கன்னிமரியாள் சிலைகள் தேரில் பவனி வந்தன. இதில் 18 கிராமத்தினர் பங்கேற்றனர். ஊர் பிரமுகர்கள் செபஸ்தியான், அருள்ராஜ், அமலதாஸ், ஜான்பீட்டர் ஏற்பாடுகளை செய்தனர்.