பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நவசக்தி வாராகி அம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே கவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ வாராகி மந்திராலயம் உள்ளது. இங்கு அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை உள்ளிட்டவை நடந்தன. மதியம் உச்சி பூஜையும் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.