சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். வீரஸ்தானம் என்பதுவே வீரட்டானம் என்றாயிற்று. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
1. திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம் 2. திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம் 3. திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம் 4. திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம் 5. திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம் 6. திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம் 7. திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம் 8. திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.