சூலூர் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2020 11:11
சூலூர்: சூலூர் வட்டார முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியது. முருகன் கோவில்களில் நடக்கும் விழாக்களில் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக நடக்கும். பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.
சூலூர் வட்டாரத்தில் உள்ள சென்னியாண்டவர் கோவில், சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில், கண்ணம்பாளையம் அறுபடை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தனர். ஆறாவது நாள் சூரசம்ஹார விழாவும், திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. துவக்க விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க்று சஷ்டி விரதத்தை துவக்கினர். மேலும், பல கோவில்களில் இரவு குருப்பெயர்ச்சி விழா பரிகார ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நடந்ததன. இதில் பக்தர்கள் பங்கேற்று குரு பகவானை மனமுருக வழிபட்டனர்.