கொரோனா சோதனையில் நெகட்டிவ்: சபரிமலையில் அலட்சியம் வேண்டாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2020 09:11
சபரிமலை : கொரோனாவிற்கு ரேபிட் முறையில் செய்யப்படும் ஆன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து விட்டது என்பதற்காக கட்டுப்பாடுகளில் அலட்சியம் காட்ட வேண்டாம் என சபரிமலை பக்தர்களுக்கு கேரள சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை வரும் பக்தர்கள் 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இது வெளி மாநில பக்தர்களுக்கு சாத்தியமில்லாதது. இதனால் நிலக்கல்லில் பக்தர்களுக்காக ஆன்டிஜன் கொரோனா பரிசோதனை வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 625 ரூபாய் செலுத்தி பரிசோதனை செய்யலாம். நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையும் பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் இந்த மையம் செயல்படும். சன்னிதானத்தில் பணிக்கு வந்த ஒரு போலீஸ்காரர் ஊரில் பரிசோதனைக்கு சளி மாதிரி கொடுத்து வந்தார். அதன் முடிவு தாமதம் ஆனதால் நிலக்கல்லில் ஆன்டிஜன் பரிசோதனை எடுத்தபோது நெகட்டிவ் வந்தது. இதனால் அவர் சன்னிதானம் வந்தார். ஆனால் ஊரில் பாசிட்டிவ் வந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கொரோனா ஆன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் வந்து விட்டது என்பதற்காக கொரோனா கட்டுப்பாடுகளில் பக்தர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் பக்தர்கள் வசதிக்காக சபரிமலை பாதையில் பந்தளம், கோழஞ்சேரி, மல்லப்பள்ளி, திருவல்லா உள்ளிட்ட 15 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.