குன்றத்தில் வேல் வாங்கிய முருகன்: இன்று சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2020 09:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (நவ., 20) மாலை 4.00 முதல் 5.30 மணிக்குள் நடக்கும் சூரசம்ஹார லீலைக்காக கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இன்று சுவாமி சம்ஹார அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகு தேவர் வெள்ளி குதிரை வாகனத்திலும் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.21ல் மூலவர் முன்பு தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.