பதிவு செய்த நாள்
24
நவ
2020
03:11
விருத்தாசலம்; விருத்தாசலம் பஸ் நிலைய முகப்பில், ரேவதி மெடிக்கல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மேல், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், பாலாலயம் செய்து, முதல்கால யாகபூஜைகள் துவங்கியது.நேற்று அதிகாலை 4:00 மணியளவில், இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்னை, பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, சின்னப்பா சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், காலை 7:00 மணியளவில், கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை, வரசித்தி விநாயகர் வழிபாட்டுக்குழு மற்றும் ரேவதி மெடிக்கல் காம்ப்ளக்ஸ் வணிகர்கள் செய்திருந்தனர்.