பதினாறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் ‘எச்சரிக்கைச் சின்னம்’. திதியோன் வரைந்த இந்த ஓவியத்தில் மனிதன் ஒருவன் மூன்று கைகளுடன் நின்றிருப்பான். ஒன்று இளமையாகவும், இன்னொன்று நடுத்தர வயதைச் சேர்ந்ததாகவும், மூன்றாவது வயதானவரின் கை போலவும் வரையப்பட்டிருக்கும், இளமையான கை எதிர்காலத்தையும், நடுத்தரக் கை நிகழ் காலத்தையும், வயதான கை இறந்த காலத்தையும் காட்டுகிறது. கடந்தகால அனுபவங்களின் விளைவாக மனிதன் நிகழ்காலத்தில் கவனமுடன் வாழ்கிறான். எதிர்காலத்தில் தவறு செய்து விடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன் இருப்பதை இது காட்டுகிறது. சாதாரண மனிதனின் வாழ்க்கை இப்படிப்பட்டது தான். கடந்த கால அனுபவங்கள் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. நிகழ்கால அனுபவங்கள் கடந்த காலத்திலிருந்தே பெறப்படுகின்றன. ஆனால் ஆண்டவரை நம்புபவரின் வாழ்க்கை இதிலிருந்து மாறுபடும். நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அவரே நிர்ணயிக்கிறார்.