தொழிலதிபர் ஜஸ்டின் பணம் பெருக்கும் வித்தை கற்றவர். தன் மனைவி, பிள்ளைகளைக் கவனிக்கும் பொறுப்பை மறந்து வாழ்ந்தார். வீட்டிற்கு விருந்தாளி போல் வந்து செல்வார். குடும்பத்தையே மறந்தவர் ஆண்டவரை சிந்திப்பாரா... இல்லையே... காலம் ஓடியது. ஒருநாள் அவருக்கு ஞானம் வந்தது. பணம் குவிந்திருந்தும் நிம்மதி இல்லையே என வருந்தினார். வாழ்க்கைக்கு முக்கியம் பணமா நிம்மதியா என்ற கேள்வி மனதில் பிறந்தது. பணம் சேகரிப்பது மட்டுமல்ல வாழ்க்கை. எத்தனை காலம் இந்த மண்ணில் நான் உயிருடன் இருப்பேன் என உத்தரவாதம் தர யாரால் முடியும்?. உறவுகள் இல்லாத மனிதனுக்குச் சொத்துக்கள் எதற்கு? ஆண்டவரிடம் மண்டியிட்டு அழுதார். அவரது சோகங்கள் கண்ணீரில் கரையத் தொடங்கின. உறவுகளை எல்லாம் அரவணைத்தார். இதனைக் கண்டு மனைவி மகிழ்ந்தார். வருமானம் குறைந்தாலும் நிம்மதி பெருகியது.