சென்னை சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2020 10:11
சென்னை; சென்னை நகரின் சிவாலயங்களில், கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, மகா நந்தியம்பெருமானுக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பிரதோஷ வழிபாடு, இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.பக்தர்கள் வசதிக்காக, பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மாலையும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு, http://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற இணைய தள முகவரி மூலம், இன்று மாலை, 4:30 மணிக்கு நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.