மயிலம் : மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில், நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மதியம் 12 :00 மணிக்கு விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், பாலசித்தர், நவகிரக சுவாமிகளுக்கு நறுமண பொருட்களினால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12;00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சங்கு கண்ணர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றினர். 6.:10 மணிக்கு தேரடி வீதியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது 6:30 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் கிரிவலம் வந்தார். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்திருந்தார்.