பதிவு செய்த நாள்
30
நவ
2020
12:11
திருநீர்மலை : தொடர் மழைக்கு, திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் குளம் நிரம்பியதை அடுத்து, குளத்தில் இருந்த குப்பை கழிவுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டன.
தொடர் மழையால், புறநகரில் உள்ள நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. பல ஏரிகளில் இருந்து, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வறண்டு கிடந்த, பல்லாவரத்தை அடுத்த, திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் குளமும் நிரம்பியுள்ளது.இதனால், பக்தர்கள், சுற்றியுள்ள பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதேநேரத்தில், குளத்தில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கியிருந்தன. சுற்றி, செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. அவற்றை, நேற்று முன்தினம், கோவில் நிர்வாகத்தினர் அகற்றினர். இதில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதேபோல், உடைந்த படிக்கெட்டுகளையும், சுற்றுச்சுவரையும் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.