நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம், வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை லோகு குருக்கள் செய்தார். அருள்தரும் அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.