பதிவு செய்த நாள்
30
நவ
2020
02:11
கடலுார் : கடலுார் கோவில்களில் கார்த்திகை தீபத்தையொட்டி சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தையொட்டி கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், சண்முகருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. சங்கு மண்டபத்தில் பாடலீஸ்வரருக்கு 5 கலசங்கள் வைத்து பூஜை, ேஹாமங்கள் நடந்தது. விநாயகர், பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், சண்முகர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளுக்கு 5 பெரியவிளக்குகள் கொண்டு சென்று பூஜை நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்பு 5 சொக்கபனைகள் ஏற்றப்பட்டது. இதேப் போன்று, கடலுார், பழைய வண்டிப்பாளையம் கற்பக விநாயகர், புதுக்குப்பம் பராசக்தி மாரியம்மன், திருப்பாதிரிப்புலியூர் விகட விநாயகர் உட்பட பல்வேறு கோவில்களிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தையொட்டி கடலுாரில் பொது மக்கள் தங்கள் வீடுகளை நேற்று சுத்தம் செய்து சுவாமியை வழிபட்டனர். மாலையில் வீட்டு வாசல்களில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். கிராமங்களில் இளைஞர்கள் கார்த்தி (தீப்பந்தம்) சுற்றி உற்சாகமாக கொண்டாடினர். நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை கோவில் முழுவதும் அகல்விளக்குள் ஏற்றப்பட்டது. பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கபனை ஏற்றப்பட்டது.