Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் மருதமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் மருதமலையில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி மலைக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபம்
எழுத்தின் அளவு:
திருச்சி மலைக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபம்

பதிவு செய்த நாள்

30 நவ
2020
02:11

திருச்சி: திருச்சி, மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தென் கயிலாயம் என போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தன்று, 273 அடி உயரமுள்ள மலைக்கோட்டை உச்சியில், பிள்ளையார் கோவிலுக்கு அருகில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.கடந்த, 27ம் தேதி, மலை மீது வைக்கப்பட்ட கொப்பரையில், 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, 300 மீட்டர் பருத்தி துணியில் தயாரித்த திரியை ஊற வைத்தனர்.

கார்த்திகை தீபத் திருநாளான நேற்று மாலை, 5:30 மணிக்கு, தாயுமானவ சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது.தொடர்ந்து, மேள தாளம் முழங்க, அதிலிருந்து தீப ஜோதியை, மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர். மாலை, 6:00 மணிக்கு, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வைக்கப்பட்ட கொப்பரையில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதை தரிசித்த பின், திருச்சி மாநகர பகுதி மக்கள், வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.கொரோனா காரணமாக, கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, நேற்று மாலை, 3:00 மணி முதல், கோவிலில், தீப தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல, பழநி, திருப்பரங்குன்றம் உட்பட பல்வேறு கோவில்களிலும் நேற்று, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar