உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே உள்ள களரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. டிச. 3 அன்றுமுதல்கால யாகசாலை பூஜையுடன்துவங்கியது.நேற்று காலை 10:00 மணியளவில் கோயில் விமான கலசத்தில்சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் மாரியம்மனுக்கு18 வகையான அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை இந்து சத்திரிய நாடார் உறவின்முறையினர், களரி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.கடலாடி:- கடலாடி ஐயப்பசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சர்வ தீர்த்த விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலை 8:30 மணிக்கு கோயில் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.மூலவர் சர்வ தீர்த்த விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட11 வகையான அபி ஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.