புதுச்சேரி சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2020 11:12
புதுச்சேரி; லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.லாஸ்பேட்டை சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிவகால ஞான பைரவருக்கு, பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை 7ம் தேதி, ஏக தின லட்சார்ச்சனை விழா நடக்கிறது. விழாவையொட்டி, காலை 4:30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முதல் பிரிவு லட்சார்ச்சனை நடக்கிறது. மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இரண்டாவது பிரிவு லட்சார்ச்சனை நடக்கிறது.அதைத்தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு சோடச உபசார தீபாரதனை நடக்கிறது.