திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2020 09:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் நெல்லிமர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணை கோயிலான இக்கோயிலில் காசுக்கார செட்டியார்கள் சார்பில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மூலவர்கள் சொக்கநாதர், மீனாட்சி அம்மன், நெல்லிமர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர்கள் சத்திய கிரீஸ்வரர், கோர்வர்த்தனாம்பிகை அம்பாள், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.