அல்லாஹ் என்னும் அரபுச் சொல் இறைவனைக் குறிக்கும். இச்சொல்லுக்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. அவனுக்கு இணை யாரும் கிடையாது. அவனிடம் உள்ள நற்பண்பு அனைத்தும் பூரணமானவை. அளவற்ற கருணை, வல்லமை, நீதி மிக்கவன். இறுதியில் மரணிக்கச் செய்து மறுமை நாளில் நியாயத் தீர்ப்பு வழங்குபவன்.