கொடுமுடி: மகுடேஸ்வரர் கோவில் உண்டியலில், 12 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கொடுமுடியில் புகழ் பெற்ற மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. பரிகார ஸ்தலமாக உள்ளதால், தமிழகம் மட்டுமின்றி, வட மாநில பக்தர்களும் வருகின்றனர். கோவில்களில் வைக்கப்பட்டுள்ள, 20 உண்டியல்கள், கொரோனா ஊரடங்கால், 100 நாட்களுக்கு பிறகு, நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 12 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.