அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கத்தில், புகழ் பெற்ற ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், நான்காவது சோமவாரத்தையொட்டி, ருத்ர அபிஷேகம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது.அப்போது, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிக்கு, பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, தீப ஆராதனை செய்து, ருத்ரா அபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.