பதிவு செய்த நாள்
09
டிச
2020
04:12
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டி ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை வரதராஜபெருமாள் கோவில் திருப்பணி குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பூர்ணராவ் முன்னிலை வகித்தார். பொருளாளர்செல்வகுமார் வரவேற்றார்.கூட்டத்தில் வரும் 10 ம்தேதி கோவில் திருப்பணி தொடங்க பாலாயணம் செய்வது எனவும், திருப்பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க தேவையான பொருட்களை ஏற்பாடுகள் செய்வது குறித்தஆலோசனைகள் செய்தனர்.திருப்பணி குழு நிர்வாகிகள் சீனிவாசன், சந்தானம், ரவி, சுப்புராயலு, பாபு, வாசு, தேவநாதன், கண்ணன், பலராமன், ரமேஷ், சுகுமார், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.