திருமலையில் ஒரு மாதத்திற்கு சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2020 02:12
திருப்பதி: மார்கழி மாதத்தில் டிசம்பர் 16 முதல் ஜனவரி 14 ந்தேதி வரை திருமலை திருப்பதியில் அதிகாலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாட இருக்கின்றனர். மாதங்களில் மிகப் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது இந்த மாதம் முழுவதும் கடவுளை வணங்குவதற்கு என்றே ஒதுக்கிவைத்திருப்பர் .பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்து வழிபாடு இந்த மாதம் மிகவும் பிரசித்தம்.விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக புனிதமான காலம் என்று நம்பப்படுகிறது. எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவர்.