பதிவு செய்த நாள்
10
டிச
2020
02:12
சென்னிமலை: சென்னிமலை அடுத்துள்ள, முருங்கத்தொழுவு, வாகை தொழுவு அம்மன் கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் மங்கள மஹா சண்டி யாக பெருவிழா நேற்று நடந்தது. கணபதி ?ஹாமத்துடன் துவங்கி, சப்தசதி வழிபாடு, 64 யோகினி, 64 பைரவர் பலி பூஜை, சுமங்கலி பூஜை, கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பூஜைகளை முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவில், பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க சிவாச்சாரியார் தலைமையில், 12க்கும் மேற்பட்டவர்கள் செய்தனர். பா.ஜ., மாநில துணை தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.