அவலுார்பேட்டை - தேவனுார் கோவிலில் 4 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனுார் அடுத்த தேவனுார் கிராமத்தில் பழமையான கமலேஸ்வரி அம்பாள் உடனுறை திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 4 ஆண்டுகள் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கலசபூஜை, யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. 9;00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் கிராம மக்கள், திருப்பணிக்குழு தலைவர் மணி, அன்பழகன் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.