800 ஆண்டுகளுக்குப்பின் டிச.,21-ல் வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2020 04:12
800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வானில் தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் டிசம்பர் 21-ல் தோன்றும்! சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய இரண்டு கிரகங்களாக உள்ளது வியாழன் மற்றும் சனி. இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும். இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என கூறப்படுகிறது! 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும் இந்த நட்சத்திரம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர் கணித்துள்ளனர். அந்த நாள் நீண்ட இரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்! வியாழனும் சனியும் 20 வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கும் என்றாலும். இந்த நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தெரியும்! கடைசியாக கடந்த 1226ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றியது!