பதிவு செய்த நாள்
12
டிச
2020
10:12
நாகர்கோவில்: தக்கலை அருகேயுள்ள, குமார கோவிலுக்கு, கார்த்திகை கடைசி வெள்ளியான நேற்று போலீஸ், பொதுப்பணித் துறையினர் மற்றும் பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே, வேளிமலை குமார கோவில், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு, மூலவராக முருகன், வள்ளியுடன் காட்சி தருகிறார். மன்னரின் உத்தரவுப்படி, மக்களின் சமாதான வாழ்வுக்காக போலீசாரும், நாடு செழிக்க வேண்டி பொதுப்பணித் துறையினரும் காவடி எடுத்து, குமார கோவிலுக்கு சென்றனர்.
தற்போதும், அந்த மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், நேற்று காலை, தக்கலை பொதுப்பணித் துறை மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, தலா மூன்று மலர் காவடிகள் மேளதாளம் முழங்க புறப்பட்டு சென்றது. காவடிகள் குமார கோவில் சேர்ந்ததும், முருகனுக்கு அபிஷேகம் நடந்தது.தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், உயர் அதிகாரிகள், ஷூ அணிந்து பங்கேற்றதால், பக்தர் கள் அதிருப்தி அடைந்தனர்.