பதிவு செய்த நாள்
12
டிச
2020
02:12
கூடலுார்:கூடலுார் வன சோதனை சாவடி அருகே உள்ள, சக்தி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 9ம் தேதி துவங்கியது. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து முதல் கால பூஜைகள் நடந்தது.நேற்று, காலை, 7:30 மணிக்கு நான்காம் காலயாக பூஜையும்; தொடர்ந்து, 9:40 மணிக்கு கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம், 57ம் குரு ஸ்ரீமத் ராஜா சரவணமாணிக்க வாசக சுவாமிகள் தலைமையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.