வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், மன்னார்சாமி சமேத, பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வாழ்முனி மற்றும் செம்முனி சிலைகளில், சில திருப்பணிகள் நடந்தன.இதன் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம், கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 10:15 மணி அளவில், சிவாச்சாரியர், புனித நீரை ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.