பதிவு செய்த நாள்
14
டிச
2020
12:12
லக்னோ: குடியரசு தின விழா, ஒவ்வொரு ஆண்டும், ஜன., 26ல், டில்லியில் விமரிசையாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாநில அலங்கார ஊர்திகள், அந்த மாநிலத்தின் புகழை பறைசாற்றி, டில்லியில் ராஜபாதையில் வலம் வரும்.இந்தாண்டு விழாவில், உத்தர பிரதேச மாநில ஊர்தியில், அயோத்தி ராமர் கோவிலின் மாடல் இடம் பெற வேண்டும் என, முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்புகிறார். தீபாவளியன்று, அயோத்தி ராமர் கோவிலில் ஆறு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன; இது, தங்கள் மாநில அலங்கார ஊர்தியில் பிரதிபலிக்க வேண்டும் என்பது யோகியின் ஆசை. வரும், 2022ல், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது, மாநில அரசு.