ராஜபாளையம் : ராஜபாளையம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில் 35 ம் ஆண்டு திரு வீதி உலா நடந்தது.
மூன்று நாள் நடைபெறும் விழாவில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை, மறுநாள் அஷ்டாபிேஷகம், நாம சங்கீர்த்தனம், சித்தி விநாயகர் கோயில் உற்ஸவர் கும்பாபிேஷகம், கன்னி பூஜை நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று காலை 10:00 மணிக்கு மேல் காவல் கருப்பசாமி தேர் முன் செல்ல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா முடங்கியாறு ரோட்டில் துவங்கியது.மாடசாமி கோயில் தெரு, பழைய பஸ் ஸ்டாண்டு, ஆண்டத்தம்மன் கோயில் தெரு வழியே அன்னதான பந்தலுக்கு வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குருநாதர் முத்துராமலிங்கம் தலைமையில் சேவா சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.