Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ... ரிஷபம் : மார்கழி  பலன் ரிஷபம் : மார்கழி பலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேஷம் : மார்கழி ராசிபலன்
எழுத்தின் அளவு:
மேஷம் : மார்கழி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 டிச
2020
07:12

அசுவனி : ராசிநாதன் செவ்வாயின் ஆட்சி பலமும் நட்சத்திர அதிபதி கேதுவின் உச்ச பலமும் உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும். கேதுவின் எட்டாம் இடத்து வாசம் ஒரு சில நேரத்தில் தடையினைத் தோற்றுவித்தாலும் அதனைத் தாண்டி வெற்றி பெறும் அம்சம் நன்றாக உள்ளது. உங்கள் செயல் வேகம் அதிகரிக்கும். போட்டியாளர்களுக்குச் சிறிதும் வாய்ப்பளிக்காது உங்கள் வெற்றியை உடனுக்குடன் உறுதி செய்வீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாது தைரியத்துடன் செயல்படுவதால் வெற்றி என்பது உறுதியாகிறது. அடுத்தவர்களின் விமர்சனங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறீர்கள். எனினும் ஆழம் தெரியாமல் காலைவிடுவது நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டு வரும் அதே நேரத்தில் பண விவகாரத்தில் முன்பின் தெரியாத புதிய நபர்களால் ஏமாற்றப்படும் சூழலுக்கு ஆளாகலாம். குடும்பத்தில் அமைதியான சூழலுக்கு பங்கம் உண்டாகக் கூடும். பணிச்சுமை அதிகரிக்கும் நேரம் என்பதால் குடும்பப் பொறுப்புகளை கவனிக்க இயலாது போகலாம். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் உபயோகமாய் அமையும். டிச. மாதத்தின் இறுதியில் தொலைதூரப் பயணத்திற்கான வாய்ப்புண்டு. இதுநாள் வரை விரோதம் பாராட்டி வந்த உறவுமுறை ஒன்று உங்களின் நட்புறவை நாடி வரக்கூடும். பிள்ளைகளின் ஆலோசனைகள் குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். வாழ்க்கைத்துணையோடு கலந்து ஆலோசிக்கும் நேரம் குறையலாம். பொழுதுபோக்கு அம்சங்களான கேளிக்கை, கொண்டாட்டங்களில் பங்குபெற இயலாமல் போகும். சுயதொழில் செய்வோர் பேச்சுத்திறமையின் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் கடமை தவறாத செயல்பாட்டின் மூலம் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது.

பரிகாரம் : பவுர்ணமி நாளில் அம்மன் வழிபாடு.
சந்திராஷ்டமம் : ஜன. 9

பரணி: உங்கள் நட்சத்திர அதிபதி சுக்ரன் ஜன. 5 வரை எட்டில் அமர்வதால் கூடுதல் செலவுகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவாக அமைந்தாலும் அதற்குரிய பலனை அனுபவிப்பீர்கள். ராசி அதிபதி செவ்வாயின் ஆட்சிபலம் எதையும் சாதிக்கும் திறனைத் தரும். ஆக இந்த மாதத்தில் அதிகம் செலவழித்தாவது நினைத்த காரியத்தை சாதித்து விடுவீர்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். உறவினர்கள் வழியில் கலகத்தினை சந்திக்க நேரிடும். சற்று பொறுமையாக இருந்தால் எல்லா பிரச்னைகளையும் எளிதாக சமாளிக்க இயலும். தன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருள் வரவு உயரும். நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது எதிர்கால நன்மையைத் தரும். வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயத்தைப் பெற்றுத் தரும். வண்டி, வாகனங்களால் ஒரு சில செலவுகளுக்கு ஆளாவீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியை சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. நண்பர்களோடு கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற அதிகம் செலவழிப்பீர்கள். நினைத்த விஷயங்கள் எளிதில் நிறைவேறிக் கொண்டிருப்பதால் மனதில் தோன்றும் அலட்சிய மனோபாவத்தைத் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை வியாதிக்காரர்கள் உணவுப் பழக்கத்தில் கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் செயல்கள் ஒரு சில நேரத்தில் சங்கடம் தந்தாலும் இன்முகத்தோடு சமாளிப்பீர்கள். முன்பின் தெரியாத நபர்களோடு கொள்ளும் நட்புறவினால் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரலாம். பெற்றோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் முறையில் உங்கள் ஆலோசனைகள் நல்ல வெற்றியைப் பெற்றுத் தரும். லாப ஸ்தானத்தில் வாசம் செய்யும் கிரகங்களின் துணையுடன் வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தினை அடைந்து தொழில் நிலை சிறக்கக் காண்பார்கள். நற்பலன்களைத் தரும் மாதமாக அமையும்

பரிகாரம் : மகாலட்சுமி வழிபாடு நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம் : ஜன. 9, 10

கார்த்திகை 1ம் பாதம் : நட்சத்திர அதிபதி சூரியனின் பாக்ய ஸ்தான சஞ்சாரமும் ராசி அதிபதி செவ்வாயின் ஆட்சி பலமும் ஒன்றாக இணைந்து உங்கள் செயல்வேகத்தை கூட்டும். அடுத்தவர்களால் செய்யத் தயங்கும் பணியையும் எளிதாக செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள். பொதுக்காரியங்களில் முன்னின்று செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். இந்த மாதத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்கள் வெற்றிக்கான காரணிகளாக அமைகிறது. தர்ம காரியங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.. வெறும் தன ஆதாயத்தினை மட்டும் கருத்தில் கொள்ளாது செய்யும் செயலில் கிடைக்கும் பெயரையும், மரியாதையையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவீர்கள். பொருள் வரவினைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இதுநாள் வரை தடைபட்டிருந்த வரவுகள் தடையில்லாமல் வரத்துவங்கும். பேசும் வார்த்தைகளின் மூலம் மதிப்பும் மரியாதையும் உயரக் காண்பீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப் போய் தர்மசங்கடத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. தகவல் தொடர்பில் உண்டாகும் தாமதங்கள் உங்கள் தொழிலில் எதிரொலிக்கக் கூடும் என்பதால் முக்கியமான தகவல்களை நேரடியாக கொண்டு சேர்ப்பது நல்லது. ஓய்வில்லாமல் உழைத்து வரும் நீங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது உடலுக்கும் மனதிற்கும் சிறிது ஓய்வினைத் தந்து வாருங்கள். வாழ்க்கைத்துணையுடன் செலவழிக்கின்ற நேரம் குறையும். செலவுகள் கட்டுக்குள் இருந்து வரும். உயர்கல்வி மாணவர்கள் சிறப்பான நிலையை உணர்வார்கள். அரசியல் துறையில் உள்ளோர் உயர்வினை அடைவார்கள். உத்யோக முறையில் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வினைக் காண்பீர்கள். வியாபாரிகள் கூடுதல் அலைச்சலின் பேரில் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.

பரிகாரம் : சுவாமி ஐயப்பனை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : ஜன. 10

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar