Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரநாராயண பெருமாள் கோவிலில் பகல் ... வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம் வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை கோவிலில் பகல் பத்து உற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
காரமடை கோவிலில் பகல் பத்து உற்சவம் துவங்கியது

பதிவு செய்த நாள்

16 டிச
2020
12:12

மேட்டுப்பாளையம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. சுவாமி முன்பு ஸ்தலத்தார் மற்றும் அர்ச்சகர்கள் பாசுரங்களை சேவித்தனர்.

காரமடையில், மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று, கோவிலில், பகல் பத்து உற்சவம் துவங்கியது. காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், திருமஞ்சனம் நடந்தது. காலசந்தி பூஜை முடிந்தவுடன், அரங்கநாத பெருமாள் மட்டும், சிறப்பு அலங்காரத்தில், கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள் எழுந்தருளினர். அங்கு கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் சுவாமி முன்பு, திருமங்கை ஆழ்வார் அருளிய, திருமொழி, கோவில் திருமொழி மற்றும் திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் ஆகிய பாசுரங்களை சேவித்தனர். அதன்பின்பு மங்கள ஆராத்தியுடன் பகல்பத்து முதல் நாள் நிகழ்ச்சி, நிறைவடைந்தது. இந்த பூஜைகளில் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கைலாசம், மிராசுதாரர்கள், ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, வருகிற 24-ஆம் தேதி வரை சுவாமி முன்பு ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் திருமொழி பாசுரங்களை சேவிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar