பதிவு செய்த நாள்
16
டிச
2020
03:12
ஈரோடு: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடக்கும். நடப்பாண்டு வரும், 25ல் விழா நடக்கிறது. கொரோனா பரவலால், மாவட்ட நிர்வாகம், அனுமதி கிடைக்காத நிலையில், நேற்று பகல் பத்து உற்சவம் துவங்கியது. அடுத்த பத்து நாட்கள் உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், மூலவர் கருவறையிலிருந்து அருள் பாலிப்பார். வரும், 24ல் கல் மண்டபத்தில் மோகினி (நாச்சியார்) அலங்காரத்தில் காட்சி தருவார். 25ல் காலை, 2:45 மணிக்கு திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடத்தப்பட்டு, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக பிரவேசிப்பார். அதைத்தொடர்ந்து, ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும். அந்த பத்து நாட்களும், மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் சேவை சாதிப்பார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். கொரோனா வைரஸ் பரவலால், இதுவரை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில், எளிமையாக நிகழ்ச்சிகள் மட்டும் தொடங்கியுள்ளது.