பதிவு செய்த நாள்
16
டிச
2020 
03:12
 
  உடுமலை:குறிஞ்சேரி ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவில், மண்டல பூஜை நிறைவு சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை ஒன்றியம், குறிஞ்சேரியில், ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிேஷகம், அக்., 28ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நாள்தோறும், சுவாமிகளுக்கு அபிேஷகத்துடன் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நேற்று, மண்டல பூஜை நிறைவுபெறுவதையொட்டி, லிங்கேஸ்வரருக்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.