திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் நேற்று (டிச.15) முதல் 2021 ஜன.4 வரை ஏகாதசி திருவிழா நடக்கிறது. நேற்று முதல் டிச.24 வரை பகல் பத்து, டிச.25 முதல் ஜன.4 வரை ராப்பத்து உற்சவமும் நடக்கிறது. இதையொட்டி டிச.25 ல் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.திருவிழாவின் முதல் நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக திருவிழாவை எளிமையாக நடத்த அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. சொர்க்கவாசல் திறப்பு அன்று குறைவான பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.